அக்குனை முற்றாக முடக்கம்!

கண்டி – அக்குறனை, தெலம்புகஹவத்தையில் கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை அக்குறனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அனைத்து கிராம பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.

அக்குறனை பிரதேச செயலாளர் இந்திக்கா குமார அபேசிங்க இதனைத் தெரிவித்தார்.

அக்குறனைக்கு பிரவேசிக்கின்ற அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு உள்நுழைதல் மற்றும் வெளியேறுதனை தடை செய்திருக்கின்றனர்.

குறித்த பகுதியில் வர்த்தகர் ஒருவருக்கு முதலில் கொரோனா வைரஸ் ஏற்பட்ட பின் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் வைரஸ் பரவியது.

You May also like