சர்வதேச கப்பலில் இருந்து இருவர் இலங்கை வைத்தியசாலைகளில் அனுமதி!

இலங்கை கடற்படையினர் எம்.எஸ்.சி மெக்னிபிகா பயணக் கப்பலில் சுகவீனமுற்றிருந்த ஜேர்மனிய வயோதிப பெண்ணை இன்று திங்கட்கிழமை வைத்தியசாலையயில் அனுமதித்துள்ளார்கள்.

குறித்த எம்.எஸ்.சி மெக்னிபிகா கப்பலில் இலங்கையர் ஒருவர் இறங்குவதாக இலங்கை துறைமுகத்தில் தரிக்கப்பட்டது.

இச்சமயத்தில் இருதய நோயாளியான 75 வயது மதிக்க தக்க ஜேர்மனிய வயோதிபப் பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாலியிலிருந்து வந்த கப்பல் மீண்டும் இத்தாலிக்கு திரும்பிய போது இலங்கையில் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டது. அப்போது அதில் சமைலயறை உதவியாளராக பணிபுரிந்த இலங்கை இளைஞர் ஒருவர் இறங்க அனுமதி கோரியிருந்தார்.

அந்த அனுமதி வழங்கப்பட்டபோது ஜேர்மன் பெண் ஒருவரும் சுகவீனமுற்ற நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May also like