நுவரெலியாவில் கொரோனாவா? உண்மை அறிய உள்ளே செல்லுங்கள்

நுவரெலியாவில் கொவிட் 19 தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஆகிய இருதரப்பினரும் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை உறுதிப்படுத்தினர்.

நுவரெலியாவில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த செய்தியை அடுத்து, நுவரெலியா மக்கள் மத்தியில் அச்சநிலைமை ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து, சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு என அனைத்து பிரிவுகளிடமும் நாம் இந்த விடயம் தொடர்பில் வினவியிருந்தோம்.

நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர் எவரும் இதுவரை அடையாளம் காணப்பட்டமை குறித்து எந்தவித தகவலும் பதிவாகவில்லை என பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டார்.

You May also like