ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்: விரிவாக தெரிந்துகொள்ள உள்ளே செல்க!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் கால நேரத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள 21 மாவட்டங்களிலும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதுவரை இரவு 8 மணிதொடக்கம் அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் இந்த மாவட்டங்களில் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து 27ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களிடையே உள்நுழைதல் மற்றும் வெளிNதுயறுதல் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளது.

You May also like