அநுராதபுரம் டிப்போவை மூடியது கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான அநுராதபுரம் டிப்போ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் நேற்று புதன்கிழமை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயின் அயலவர் அநுராதபுரம் டிப்போவில் பணிபுரிவது தெரியவந்தது.

இந்நிலையில் டிப்போவில் பணிபுரியும் 300 பேரது சுகாதார நிலைமை கேள்விக்குறியாகியிருப்பதால் டிப்போ தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like