காலையில் பிக்கு கைது: மாலையில் வெளியே வந்தார்!

குருநாகல், வாரியபொல பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இவர் இன்று பகல் வாரியபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதி குறித்த பிக்கு பொலிஸ் நிலையத்திற்குள் இருவருடன் சென்று வெளியாட்டம் செய்திருக்கின்றார்.

சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பிக்கு இன்று காலை கைது செய்யப்பட்டு இன்று பகல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

You May also like