கொரோனா அச்சம்; இலங்கையில் இராணுவ முகாம் பூட்டு!

கம்பஹா – சீதுவ பகுதியில் உள்ள இராணுவ முகாம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் உள்ள இராணுவ அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து முகாம் பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை அடுத்து முகாம் மூடப்பட்டுள்ளது.

அந்த இராணுவ அதிகாரி, வெளிசற முகாமை சேர்ந்த பெண் கடற்படை அதிகாரியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May also like