மினுவங்கொடை வைத்தியசாலை முழுவதிலும் கொரோனா பரவியதா?

கம்பஹா – மினுவங்கொடை வைத்தியசாலையில் அத்தியாவசிய திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் நெருக்கமாக இருந்த வைத்தியசாலை பணிக்குழாம் உறுப்பினர்களுக்கு நடத்தவிருந்த பி.சி.ஆர். பரிசோதனை வெளிக்கள அழுத்தங்கள் காரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த தகவலை அகில இலங்கை தாதியர் சங்கம் வெளியிட்டுள்ளது.

நேற்று வைத்தியசாலையியில் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது உறுதியாகியது.

இந்நிலையில் அவர்களுக்கு அருகிலிருந்த தாதியர்கள், மருத்துவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யாதிருப்பது அநீதியாகும் என்று அந்த சங்கம் குறிப்பிடுகிறது.

இதுகுறித்து முறைப்பாட்டுக் கடிதமொன்றை குறித்த சங்கம் மேல் மாகாண சுகாதார சேகைள் செயலாளருக்கும் அனுப்பியுள்ளது.

இதேவேளை அந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த மற்றும் சேர்க்கப்பட்ட நோயாளர்களுக்கும் கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

You May also like