மக்களின் உயிர் ஆபத்தில்: காப்பாற்ற முடியவில்லை என்கிறது ஐ.தே.க!

ஜனாதிபதி தேர்தலில் வழங்கிய முதல் வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.

பொதுமக்களினதும், நாட்டினதும் பாதுகாப்பை உறுதிசெய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாலும் தற்போது படையினரைக்கூட அரசாங்கத்தினால் கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க முடியாமல் போய்விட்டது என்று அக்கட்சியின் முன்னாள் எம்.பி ஜே.சீ அலவத்துவல தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

You May also like