நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா ஏற்படும் என எச்சரிக்கை!

நாடாளுமன்றத்தை மீள அழைத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடத்தில் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்னாள் எம்.பி ரோகித்த அபேகுணவர்தன எச்சரித்தார்.

கொழும்பில் இன்று மொட்டுக் கட்சியின் ஊடக சந்திப்பு நடந்தது.

இதில் பேசிய அவர், நாடாளுமன்றத்தை எதிரணி கூறுகின்றபடி கூட்டினால் ஒருமீட்டர் தூர சமூக இடைவெளியை பேணுவது முடியாமற்போய்விடும் என்று குறிப்பிட்டார்.

You May also like