தனிமைப்படுத்தும் சட்டத்தை மீறிய பொலிஸ் அதிகாரியின் பணிக்கு ஆப்பு!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடைய பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காலி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உத்தியோகத்தருடைய பணியே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது.

கொரோனா அபாய வலயத்திலிருந்து பெண் ஒருவரை அழைத்துவந்து கெக்கந்துர – தலல்ல என்கிற பிரதேசத்திலுள்ள தனது நண்பர் ஒருவருடைய இல்லத்தில் தங்கவைத்த குற்றச்சாட்டு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது உள்ளது.

You May also like