இந்திய கப்பலின் உதவியில் நாடு திரும்பிய இலங்கை கடற்படையினர்!

இந்தியாவில் கடற்படையுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்ட இலங்கை கடைபடை அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை இந்திய கப்பலின் உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸினால் ஏற்பட்ட அச்சுறுத்தலை அடுத்து இலங்கை மற்றும் இந்தியாவில் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஷர்தா என்கிற கப்பலில் குறித்த 10 இலங்கை கடற்படை அதிகாரிகள் இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையின் அதிவேக படகில் வந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இந்த 10 அதிகாரிகளும் சுதிகரிக்கப்பட்டதோடு வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் முகாமிலும் சேர்க்கப்படுவார்கள் என்று இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May also like