சுமந்திரனைக் காப்பாற்றி சம்பந்தன் அறிக்கை: ஊடகம் மீதும் எரிந்துவிழுந்தார்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரரும், முன்னாள் எம்.பியுமான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிடம் கேட்ட கேள்வி பிழையானது என்று சித்தரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று பகல் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான நோக்கத்தைக் கொண்டு இப்படி கேள்வி கேட்பது தவறு என்றும் சம்பந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்வு வழங்குதலே பிரச்சினைகளுக்கு சரியான தீர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் யூடியூப் மூலமாக இயங்கிவரும் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பிழை என்றவாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

சுமந்திரனின் உருவப் பொம்மையை எரித்து வடக்கு மக்கள் அதற்கெதிராக எதிர்ப்பை வெளியிட்டிருந்ததோடு பல்வேறு தமிழ்க் கட்சிகளும் கண்டனம் வெளியிட்டு வந்தன.

இந்த நிலையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த அறிக்கையை வெளியிட்டு கருத்து சுமந்திரனின் கருத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

 

 

You May also like