அம்பாறை – காரைதீவு பகுதியில் கடலை அண்மித்த பிரதேசங்கள் கடல் நீர் மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்து சுனாமி பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடற் கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு இவ்வாறு கடல்நீர் புகுந்ததாக எமது செய்தியார் குறிப்பிடுகின்றார்.
இதன் காரணமாக அப்பகுதியில் மீண்டும் சுனாமி பீதி ஏற்பட்டிருக்கின்றது.
இதுபற்றி வாநிலை அவதான நிலைய அதிகாரிகளுடன் பேசியபோது, தற்சமயம் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையினால் வெள்ளநீரும், கடல்நீரும் இவ்வாறு பெருக்கெடுத்ததாக குறிப்பிட்டனர்.