நுழைச்சோலை அனல் மின் உற்பத்தி நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா?

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பகுதியான லக்விஜய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுக்கு சமமான அறிகுறிகள் தென்பட்டுள்ளதை அடுத்’த 09 பேர் புத்தளம் வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 09 பேரும் குறித்த நிறுவனத்தின் மனிதவள முகாமைப் பிரிவில் தொழில் செய்பவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாட்களாக கொரோனா அச்சுறுத்தல் நிலவிய போதிலும் நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் தொடர்ந்தும் தொழிற்பட்டு வந்தன.

லக்விஜய மின் உற்பத்தி நிறுவனம் நாட்டின் மின் தேவைப்பாட்டிற்கு 60 சதவீதப் பங்களிப்பை வழங்கிவருகின்றது.

இந்நிலையில், தற்சமயம் வழமைபோல ஊழியர்கள் அழைக்கப்பட்டு தொழிற்பட குறித்த நிறுவனம் ஆரம்பித்தது.

இதனையடுத்து 09 பேருக்கு தொற்றின் அறிகுறிகள் ஏற்பட்டதினால் ஊழியர்கள் 600 பேர் வீட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

You May also like