குவைட் நாட்டில் இலங்கையர் மூவர் கொரோனாவினால் பலி:பலர் பாதிப்பு!

குவைட் நாட்டில் தொழில்புரிந்துவந்த மூன்று இலங்கையர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

குவைட்-ஸ்ரீலங்கா ஒன்றியத்தின் இணைப்பாளரான நிசாந்த சஞ்ஜீவ மடபாத்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பர்வானியா, அஹமதி, ஹவாலி, ஜஹாரா மற்றும் குவைட் ஆகிய நகரங்களில் தொழில்புரிந்து வரும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் பலர் சட்டவிரோதமான முறையில் குவைட்டில் தங்கியிருக்கின்றனர் என்று கூறும் அவர், வீசா வைத்துக்கொண்டு குவைட் நாட்டில் தொழில்புரிந்துவரும் இலங்கையர்கள் பலர் வாடகை வாகன சாரதிகளாக தொழில்புரிந்து வருகின்ற நிலையில், இவர்களில் பலருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

You May also like