இன்று கூட்டத்தில் ரணில் எடுத்த அதிரடி முடிவு இதோ!

எந்தவொரு காரணத்திற்காகவும் அரசாங்கத்துடன் தேசிய அரசொன்றை அமைக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதிரடியாக அறிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பேசியபோதே ரணில் மேற்படி தீர்மானத்தை அறிவித்திருக்கின்றார்.

2015ஆம் ஆண்டில் பிரதமர் பதவி, அமைச்சரவை உட்பட அரசாங்கத்தை நிர்வகிக்கின்ற பொறுப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்குக் கைகூடியது. எனினும் 2019ஆம் ஆண்டில் சஜித் பிரேமதாஸவின் தோல்வியை தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து விலகி எதிர்கட்சிக்கு செல்ல எமது குழு தீர்மானம் எடுத்தது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மக்கள் ஆணையைப் பெறுவதற்கு நாங்கள் தீர்மானித்தோம்.

தற்போதைய சூழலில் மக்களின் அடிப்படைப் பிரச்சினையானது அரசியலோ அல்லது பொதுத் தேர்தலோ கிடையாது. வாழ்க்கைப் பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் என்பனவே தற்போதைய நெருக்கடி.

2015ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அனைவரும் இணைந்து தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதற்கான பொறுப்பினையும் வழங்க வேண்டும்.

இருந்த போதிலும் இன்று சிலர் அன்றாட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். அரசாங்கத்திலிருக்கும் சில அமைச்சர்களும் இதற்கு உடந்தை. நாட்டிற்கான சிறந்த திட்டங்களை நாங்கள் முன்வைக்கும்போது அவர்கள் அதனை விமர்சித்து குறுகிய அரசியல் நோக்குடன் செயற்படுகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நடந்த கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You May also like