மட்டக்களப்பில் திருமண நிகழ்வுக்கு சென்ற 30 பேருக்கு மயக்கம்

மட்டக்களப்பு – ஆரியப்பதி, கோவில்குளம் பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற 30 பேர் மயக்கமடைந்த நிலையில் மட்டக்களப்பு மற்றும் ஆரியம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று இரவு இவ்வாறு இவர்கள் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

உணவு ஒவ்வாமை காரணமாகவே இவர்களுக்கு மயக்கம் மற்றும் வாந்தி நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You May also like