குளவித்தாக்குதல்: கம்பனிகளுக்கு எதிராக விரைவில் வழக்கு?

குளவித் தாக்குதல்களுக்கு மத்தியில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தேசிய தொழிலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த சங்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அழகுமுத்து நந்தகுமார் இதனைத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் குளவிக் கொட்டுதலுக்கு இலக்காகி இரண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதோடு 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இன்றும்கூட மஸ்கெலியா பகுதியில் கர்ப்பிணித் தாய் உட்பட பலர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like