நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!

கிரியுல்ல – யகாபெதியெல்ல பகுதியில் நீராட சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் 12.00 மணியளவில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நீராடச் சென்ற போதே, அவர்கள் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

17 மற்றும் 18 வயதுகளையுடைய, மத்தேகம மற்றும் பன்னல பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் தம்பதெனிய வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May also like