இலங்கையில் சிக்கிய 117 இந்தியர்கள் பாரதம் பயணம்!

இலங்கையில் நிர்க்கதிக்குள்ளாயிருந்த 117 இந்திய பிரஜைகள் சிறப்பு Air india 0274 விமானம் மூலம் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் நேற்றிரவு கொழும்பில் இருந்து சென்னைக்கு  அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இந்திய பிரஜைகளை அழைத்து வரும் இந்தியாவின் “வந்தே பாரத் ” திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின்  அங்கமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது,

இதேவேளை  எதிர்வரும் ஜூலை 08 மற்றும் ஜூலை 18 ஆம் திகதிகளில் வந்தே பாரத் செயற்திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து டெல்லி நோக்கி air india சிறப்பு விமான சேவைகள் இயக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

You May also like