மலேரியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May also like