சுதந்திரம், ஜனநாயகத்திற்கு தொலைபேசியை தெரிவு செய்க; அகிலதாஸ் சிவக்கொழுந்து

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துடன் கூடிய அபிவிருத்தியை தமிழ் மக்கள் எதிர்பார்கின்றார்கள். அதற்கு தொலைபேசியே சரியானது என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்

கொற்றாவத்தை ஜே360 கிராமசேவையாளர் பிரிவில் நேற்று (20.06.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் :-

யுத்தத்தினால் அழிவடைந்த தமிழர் தாயகப் பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை மகிந்த காலத்தில் தேவையாக இருந்தது அதன் காரணத்தினால் அன்றய காலத்தின் தேவை கருதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் தற்போது ஜனநாயகத்துடன் கூடிய அபிவிருத்தியே மக்களின் தேவையாக இருக்கின்றது. அதனையே தமிழ் மக்கள் எதிர்பார்கின்றார்கள்.
மக்கள் ஜனநாயகத்தினை, சுதந்திரத்தினை, அச்சமற்ற சூழலை எதிர்பார்கின்றார்கள். அதனை ஏற்படுத்தக்கூடிய தலைமை சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாக உணர்கின்றார்கள்.

அதனாலேயே மக்களின் விருப்பத்திற்கும் கோரிக்கைக்கும் அடிபணித்து சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றேன்.

1990ம் ஆண்டு முதல் மக்களுக்கான சமூகப் பணிகளை தொடர்சியாக செய்துவந்தவன் நான். அதனை மேலும் அதிகரிக்கவும் அழகுபடுத்தவுமே அரசியலுக்குள் பிரவேசித்தேன். அதற்கான அங்கீகாரத்தினை கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களும் இறைவனும் எனக்கு வழங்கினர்.

அதனைப் பயன்படுத்தி நான் பதவி வகித்த மூன்று ஆண்டு காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கினேன்.

அரசியல் எவ்வாறு என்பதையும் அதனுள் எப்படிப்பட்டவர்கள் எல்லாம் வாழ்கின்றார்கள் என்பதையும் அந்த மாகாணசபை காலப்பகுதியில் கண்டுகொண்ட நான் மக்களுக்கான சேவையை எவ்வாறு எல்லாம் அரசியல் ஊடாக ஆற்ற முடியும் என்பதையும் கற்றுக்கொண்டேன்
மக்களுடன் மக்களின் வேண்டுகோளினை ஏற்று இந்த தேர்தலில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தொலைபேசி சின்னத்தில் இலக்கம் ஒன்றில் போட்டியிடுகின்றேன்.

மாகாணசபைத் தேர்தலின்போது மக்கள் வழங்கிய ஆதரவினை விட மேலும் அதிகளவான ஆதரவினை இந்த பாராளுமன்ற தேர்தலில் எனக்கு வழங்குவார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.
தமிழ் மக்களின் ஜனநாகக் குரலாக ஆக்கபூர்வமான சிந்தனைப பேச்சு பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டுமானால் எனது சின்னமான தொலைபேசி சின்னத்திற்கு புள்ளடியிட்டு எனது விருப்பு வாக்கு இலக்கமான முதலாம் எண்ணின் மீதும் புள்ளயிடுமாறு உங்களை சிரந்தாழ்த்தி வேண்டுகின்றேன்”  என்று கூறினார்.

You May also like