ஆட்டநிர்ணய விவகாரம்: மற்றுமொரு விசாரணை தேவை என்கிறார் மஹிந்தானந்த

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டு அதுகுறித்த விசாரணை நிறுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணை அவசியம் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிக்கின்றார்.

ஆட்டநிர்ணயத்தில் இலங்கை அணி ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்பதால் விசாரணை கைவிடப்படுவதாக நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பொலிஸ் தலைமையகத்தின் பேசவல்ல அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இதனையடுத்து உடனடியாக நாவலப்பிட்டியில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விசாரணை நிறுத்தப்பட்டமை குறித்து மற்றுமொரு விசாரணை அவசியம் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

You May also like