விமல் வீரவன்சவை கைது செய்யக் கோரிக்கை!

அமைச்சர் விமல் வீரவன்ச உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார்.

நாட்டிலுள்ள சட்டங்களுக்கு முரணாக விமல் வீரவன்ச தனது முகத்தைப் பொறித்த முத்திரை ஒன்றை வெளியிட்டதாகவும், அதனால் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கொழும்பில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இதன் காரணமாக அமைச்சர் விமல் வீரவன்சவை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை இரத்து செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

You May also like