ஐக்கிய தேசியக்கட்சியின் அடுத்த தலைவர் யார்: புதன் இறுதிமுடிவு

எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி அடுத்த தலைவர் குறித்த இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அக்கிலவிராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு இன்று பகல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேவேளை நாளை மறுதினமே தேசியப்பட்டியல் உறுப்பினர் குறித்த இறுதிமுடிவும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

You May also like