ஜனவரியில் மற்றுமொரு தேர்தல்?

மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் மாதத்திற்கு முன் இந்த தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்கனவே உத்தேசித்திருந்தது.

இருப்பினும் சாதாரண தர பரீட்சை டிசம்பரில் நடத்த இருப்பதால், ஜனவரி மாதம் இத்தேர்தலை நடத்த அரச உயர்பீடம் தீர்மானித்துள்ளது என்று நம்பகரமாக தெரியவருகிறது.

 

You May also like