அரசாங்கத்திற்குள் வலுக்கும் அமைச்சரவை எதிர்ப்பு!

அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அமைச்சரவை நியமனம் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

கடந்த முறை லங்கா சமசமாஜக் கட்சியின் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இம்முறை லங்கா சமசமாஜக் கட்சிக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அகர் இதனை கூறியுள்ளார்.

தேசியப் பட்டியலில் சேர்ப்பதற்கு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோகண லக்ஷமன் பியதாசவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

எனினும் அதனை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

You May also like