நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முக்கிய அறிவிப்பு!

மின்தடை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் நீர் சேமிப்பு வசதிகள் மற்றும் பாரிய நீர்ப்பம்பிகளை இயக்குதல் போன்ற செயற்பாடுகளுக்குரிய மின்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

எனவே குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரதேசங்களில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

You May also like