சபாநாயகராக மஹிந்த யாப்பா தெரிவு

9ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பெயரை வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன சபைக்கு மின்மொழிந்தார்.

அதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார்.

மேலதிக பெயர்கள் சபைக்கு முன்மொழியப்படவில்லை.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக சபயகராக தெரிவாகினார்.

You May also like