கொரோனா அச்சுறுத்தல்;பல நாடுகளில் இருந்து இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இரு வேறு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 296 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தென் கொரியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்தே குறித்த இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, வட கொரியாவின் Incheon விமான நிலையத்தில் இருந்து கொரிய விமான சேவைக்குச் சொந்தமான K.E – 9473 அனும் விமானம் ஊடாக 275 பேர் நள்ளிரவு 12.30 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன், கட்டார் நாட்டில் டோஹா நகரில் இருந்து கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான Q.R – 668 அனும் விமானம் ஊடாக 21 பேர் இன்று அதிகாலை 1.20 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு, நாட்டை வந்தடைந்துள்ள இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் என எமது Tamil True News விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இவ்வாறு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்தார்.

You May also like