பிள்ளையான் மீது விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் அவர் இன்று முற்பகல் 9.45 அளவில் அதில் முன்னிலையாகினார்.

இதேவேளை இன்று புதன்கிழமை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் விசாரணைக்கு வரும்படி ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like