இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா; இன்றைய நிலவரம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147  ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், நேற்று மாத்திரம் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் புதிதாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இந்தியாவில் இருந்து  வருகைதந்த கடற்படை உயர் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 946 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 63 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 189 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 2 இலட்சத்து 45 ஆயிரத்து 112 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like