நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் விவாதம்

நாடாளுமன்ற முதல் அமர்வின் இறுதி நாள் விவாதம் இன்று  இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கமைய கடந்த 08 ஆம் திகதி முதல்  நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய இன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணிவரை சபை அமர்வுகள் இடம்பெற்றன.

அத்துடன்  கடந்த   9 ஆம் திகதி உற்பத்தி வரி சட்டத்தின் கீழான 9 ஒழுங்குவிதிகள் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கடந்த 10ஆம் திகதி துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 3 ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 6 தீர்மானங்கள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

You May also like