ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி,ரணில் குறித்து ராஜித இன்றுவெளியிட்ட தகவல்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் 4 மணிநேர விசாரணையை நடத்தியுள்ளது.

இந்த ஆணைக்குழு முன்பாக அவர் இன்று காலை 9.30 அளவில் ஆஜராகினார்.

தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் ஒருமணியளவில் ஆணைக்குழுவிலிருந்து அவர் வெளியேறினார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த தாக்குதல்கள் குறித்த முன் அறிவிப்புகள் கிடைத்திருப்பதை தன்னால் உறுதிசெய்ய முடியும் என்று கூறினார்.

அதேபோல முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தப் பொறுப்பிலிருந்து நழுவிச்செல்ல முடியாது எனவும் குறிப்பிட்டார்.

You May also like