மாணவனுக்கு சேஷ்டைசெய்த உப அதிபர்-இரகசியம்காக்க இலட்சம் ரூபா?

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முனைந்த உப அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வந்த முறைப்பாட்டின்படி பாணந்துறை பொலிஸாரினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட மாணவன், குறித்த உப அதிபரின் இல்லத்திற்கு அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் இரகசியத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக உப அதிபரது மனைவியினால் ஒருஇலட்சம் ரூபா இலஞ்சமாக வழங்க முயற்சி இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

You May also like