மேல் மாகாணத்தில் அதிரடி சோதனை;24 மணிநேரத்தில் 440 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 440 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கை நேற்று காலை 06 மணிதொடக்கம் இன்று அதிகாலை 5 மணிவரை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெண்களும் இருப்பதோடு 159 பேரிடம் இருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கஞ்சாவுடன் 111 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 18 பேரும் கைதாகியதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

You May also like