08 தூதுவர்களுக்கு தெரிவுக்குழுவின் அங்கீகாரம்

வெளிநாட்டு இராஜதந்திரிகள் 08 பேருக்கான நியமனங்களை வழங்குவதற்கான அங்கீகாரத்தை உயர் பதவிகளை வழங்குவதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு வழங்கியிருக்கின்றது.

இதன்படி ஜெனீவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக சி.ஏ.சந்திரபேம தென்னாபிரிக்காவுக்கான உயர்ஸ்தானிகராக எஸ்.அமரசேகரவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்கத் தூதுவராக ரவிநாத ஆரியவங்கவும், சீனாவுக்கான தூதுவராக கலாநிதி பாலித்த கொஹன்னவும், மிலிந்த மொறகொட இந்தியாவுக்கான தூதவராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல செனிகா இரிபுரேகம பிரான்ஸிற்கான தூதவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

You May also like