இலங்கையில் தலைதூக்கும் மற்றுமொரு ஆபத்து!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர  இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடங்களை விட இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் தொடர்ந்தும் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும்   அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  பொதுமக்கள் விழிப்புணவர்வுடன் செயற்படுமாறும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

You May also like