கொழும்பிலும் தலைதூக்கிய கொரோனா-பல இடங்களில் உறுதி

கொழும்பு இராஜகிரிய பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இராஜகிரிய – வெலிகடவத்த பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் தொழில்புரியும் ஊழியர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டமை இன்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த தகவலை கோட்டே பிரிவு பொது வைத்திய அதிகாரி  மனோஜ் ரொட்ரிகோ தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு 07இல் உள்ள புனித பிரிகேட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரது பெற்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த கல்லூரியினால் இன்று பகல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

You May also like