வெளிவிவகார அமைச்சு விடுத்த விசேட அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொΡரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான வைத்தியசாலை தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரும் இலங்கையர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும்  57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like