கொழும்பில் பிரபல தனியார் வங்கி ஊழியருக்கு கொரோனா-மூடப்பட்டது கிளை

கொழும்பு – கொள்ளுப்பிட்டி கடலோர வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த வங்கி முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நபர், மினுவங்கொடை கொரோனா தொற்று பரவிய ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர் ஒருவருடன் நெருக்கமாக இருந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கிக் கிளையை மூடுவதற்கு என்.டி.பி வங்கி நிர்வாகம் நடவடிக்கை  எடுத்திருக்கிறது.

இன்றைய தினம் வங்கி கட்டிடம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like