கொரோனா 2ம் அலை; அரசே பொறுப்பேற்க வேண்டும்-ஜே.வி.பி

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட்டமைக்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று ஜே.வி.பி கூறியுள்ளது.

கொழும்பில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த முறை வைரஸ் பரவியபோது மீண்டும் பரவாது என்கிற நம்பிக்கையை மக்கள் மத்தியில் அரசாங்கம் ஏற்படுத்தியதோடு, அவ்வாறே அரசாங்கமும் நடந்து கொண்டது. ஆனால் மீண்டும் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. மக்கள் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கான பொறுப்பினை அரசாங்கமே வகிக்க வேண்டும் என்று கூறினார்.

 

You May also like