ஊரடங்கு சட்டத்தினால் கொழும்பில் திண்டாடிய மக்கள்

கொழும்பு மாவட்டத்தில் 5 பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களில் பாரிய சனநெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லம்பிட்டிய, புளூமண்டல், மோதர, மட்டக்குளி மற்றும் கிரேண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணியளவில் அமுல்படுத்தப்பட்டது.

எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக கூட்டம் கூட்டமான கடைகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும் (சூப்பர் மார்க்கட்) கூட்டங்கூட்டமாக நிற்பதை அவதானிக்க முடிந்தது.

You May also like