இரட்டை குடியுரிமையை எதிர்த்த எம்.பிக்கள் அந்தர்பல்ட்டி-ஆதரவளித்து வாக்களிக்க முடிவு

20ஆவது திருத்த யோசனையில் உள்ள இரட்டைப் பிரஜாவுரிமை என்கிற சர்ச்சைக் குரிய விடயம் குறித்து புதிய அரசியலமைப்பு உருவாக்கலின்போது தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழிக்கு அமைய அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக அமைச்சர்கள் சிலர் இன்று அறிவித்துள்ளனர்.

இரட்டைப் பிரஜாவுரிமை பிரிவுக்கு கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டுவந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, அசங்க நவரத்ன, முன்னாள் எம்.பி டிரான் அலஸ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச உள்ளிட்ட சிலரை ஜனாதிபதி நேற்று இரவு அவசரமாக அழைத்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போதே மேற்படி உறுதிமொழியை வழங்கியதாக அமைச்சர் உதய கம்மன்பில கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண,  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரட்டைப் பிரஜாவுரிமை அரசியலில் ஈடுபடுவது அனுமதிக்கக்கூடாது என்பது மாத்திரமே எமது கோரிக்கையாக இருந்த போதிலும், அடுத்தவருடத்திற்குள் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கு அமைய தங்களது முடிவை மாற்றிக்கொண்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.

You May also like