கொரோனா தொற்றாளர்களால் மருத்துவமனைகளில் கட்டில்களுக்கு தட்டுப்பாடு

இலங்கையில் இன்னும் சமூகத் தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை என்று அரசாங்கம் தெரிவிக்கிறது.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாட்டிலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான வைத்தியசாலைகளில் மேலதிக கொரோனா நோயாளர்களை அனுமதிப்பதற்கான பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.
நேற்று இரவுவரை 4468 நோயாளர்கள் கட்டில்களில் கொரோனா நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் மொத்தம் இருப்பது 5000 கட்டில்களே என்பதால் இன்னும் 500 நோயாளர்கள் கட்டில்களே மீதம் இருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். ஆகவே பாரதூரமாக கருதமுடியாத நோயாளர்களை வைத்தியசாலைகளைத் தவிர வெளியிடங்களில் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சைகளைப் பெறவும், தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

You May also like