வெள்ளைவான் கடத்தல் வழக்கு சட்டத்தரணிக்கு மீண்டும் மரண அச்சுறுத்தல்

வெள்ளைவான் கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் வாதிடும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு மீண்டும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

சட்டத்தரணி அச்சலாவுக்கு இதற்கு முன்னரும் தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விடயம் குறித்து வழக்கு ஒன்றும், குற்றப்புலனாய்வில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் அவை மீதான விசாரணைகள் இதுவரை நடக்கவில்லை என்று சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கூறுகிறார்.

5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் கடற்படையின் முன்னாள் தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரண்ணாகொட, கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தசநாயக்க, முன்னாள் முப்படை தளபதி ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உட்பட 16 சந்தேக நபர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May also like