மஹிந்தவை புறக்கணித்த அமெரிக்கா-20ஆவது திருத்தம் காரணமா?

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்காமல் சென்றமை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க செயலாளர் பொம்பியோ தனது இலங்கைக்கான விஜயத்தில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என முக்கியஸ்தர்களை சந்திக்கவிருப்பதாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வந்தன.

இதற்கு முன் இலங்கை வந்திருந்த சீனத் தூதுக்குழு ஜனாதிபதி, பிரதமர் என உயர்மட்டத்தை சந்தித்தே சென்றது.

இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அமெரிக்க இராஜாங்க செயலாளர் சந்திக்காமல் சென்றிருப்பது அரசமட்டத்திலும்கூட விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

இதேவேளை 20ஆவது திருத்தத்தின் ஊடாக பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட அதேவேளையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன.

இதன் காரணமாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ பிரதமரை சந்திக்காமல் சென்றிருக்கலாம் என்றும் அரசியல் மட்டத்தில் பேசப்படுகின்றது.

எவ்வாறாயினும் அரசாங்க தரப்பிலிருந்து இந்த சந்தேகங்களுக்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

You May also like