கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு தொற்று

கொழும்பு மாநகர சபை கூட்டத்திற்குச் சென்ற மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியிருக்கின்றது.

கடந்த 30ஆம் திகதி மேற்படி கூட்டம் கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடந்தது.

கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்தக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.

இந்நிலையில்தான் அதிலுள்ள உறுப்பினர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் சிலருக்கும் அண்மையில் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You May also like