கொரோனா வைரஸிற்கு அழைப்பு விடுத்த மலையக மக்கள்(PHOTOS)

இலங்கையில் கொவிட் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், தீபாவளியை கொண்டாடுவதற்கான கொவிட் தொற்றையும் பொருட்படுத்தாது, பொருள் கொள்வனவுகளில் மலையக மக்கள் ஈடுபட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 40திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மக்கள் இவ்வாறு ஒன்று கூடுவது ஆபத்தானது என சுகாதார தரப்பினர் கூறுகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு மலையக மக்கள், பெருமளவிலான பொருட்களை கொள்வனவு செய்கின்றமை தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஹட்டன் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே மக்கள் இவ்வாறு ஒன்று திரண்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, குறித்த பகுதியிலுள்ள வர்த்தகர்கள், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

You May also like